15,Jun 2026 (Mon)
  
CH
விளையாட்டு

பெங்களூரு அணி வீரர் விராட் கோலி உருக்கம்

விசுவாசமான ஆர்.சி.பி ரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார். 16வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கிய இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. 


ஒவ்வொரு அணிக்கும் 14 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் போட்டிகளில் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் இருந்த சென்னை, மும்பை, குஜராத், லக்னோ அணிகள் அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.


ப்ளேஓஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு அணி வீரர் விராட் கோலி; “சிறந்த தருணங்களை கொண்ட தொடராக அமைந்தது; ஆனால், இலக்கை அடைய முடியாமல் போய்விட்டது, இது ஏமாற்றமாக இருந்தாலும் தலை நிமிர்ந்து தொடர்ந்து பயணிப்போம்; அனைத்து தருணங்களிலும் எங்களுக்கு துணையாக நின்ற விசுவாசமான ரசிகர்களுக்கு நன்றி” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





பெங்களூரு அணி வீரர் விராட் கோலி உருக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு