25,Apr 2024 (Thu)
  
CH
சினிமா

ஜூன் 22ம் தேதியன்று வெளியாகும் விஜய் 68

தற்போது விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பாகவே விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 


வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில் விஜய் நடிக்க உள்ள படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அந்தப் படத்தைப் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ‘

லியோ’ படம் வெளிவரும் வரை விஜய் 68 படம் பற்றிய அப்டேட்களை கொஞ்சம் அடக்கியே வைத்திருப்பார்கள் எனத் தெரிகிறது.


இருந்தாலும் விஜய் 68 படத்தின் அடுத்த முழு அப்டேட் ஆக அவரது பிறந்தநாளான ஜூன் 22ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது. அது படத்தின் தலைப்பு அறிவிப்புடன் முதல் பார்வை வெளியாகுமா அல்லது வெறும் அப்டேட் தானா என்பது விரைவில் தெரியும். ‘மங்காத்தா, மாநாடு’ படங்களை விடவும் வேறு ஒரு தளத்தில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் வெங்கட் பிரபு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.





ஜூன் 22ம் தேதியன்று வெளியாகும் விஜய் 68

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு