18,Feb 2026 (Wed)
  
CH
சினிமா

'அங்காடி தெரு’ அஞ்சலியின் 50வது படம்

ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் ‘கற்றது தமிழ்’. இதில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் அஞ்சலி. அந்த படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். 


அதன் பிறகு ‘அங்காடி தெரு’ படத்தில் அஞ்சலியின் நடிப்பு பேசப்பட்டது. இந்த படத்துக்காக அவருக்கு விருதுகளும் கிடைத்தது. அஜித்தின் ‘மங்காத்தா’ சூர்யாவின் ‘சிங்கம் 2’ படங்களிலும் நடித்தார். ெதலுங்கிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார்.


இந்த நிலையில் திரையுலகில் அஞ்சலி நடிக்கத் தொடங்கி 17 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் தனது 50வது படத்தில் நடிக்க உள்ளார். 


அஞ்சலியின் 50வது படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது.




'அங்காடி தெரு’ அஞ்சலியின் 50வது படம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு