19,Apr 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் 'ஸ்மார்ட் அட்டை யூலை மாத இறுதிக்குள் வழங்க திட்டம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் 'ஸ்மார்ட் அட்டை வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. 


கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டையை காண்பித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொள்ளலாம். சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகள் வைத்திருக்கும் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

கட்டணமில்லா புதிய பஸ் பயண அட்டை வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது




அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் 'ஸ்மார்ட் அட்டை யூலை மாத இறுதிக்குள் வழங்க திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு