10,Jun 2026 (Wed)
  
CH
இந்திய செய்தி

மீட்புபணிகள் நிறைவு! ரயில் பாதை புணரமைப்பு தீவிரம்

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 17 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 


600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அறிவித்துள்ளார். 


மேலும், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும், ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 


ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் தடுப்பதே கவாச் திட்டம் ஆகும்





மீட்புபணிகள் நிறைவு! ரயில் பாதை புணரமைப்பு தீவிரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு