ராம்சரண் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசான 'பாகுபலி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் இணைந்து நடித்துள்ளனர். சைப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடித்துள்ளார்.
500 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக 'ஆதிபுருஷ்' உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியான இந்தப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பலவிதமான ட்ரோல்களை சந்தித்தது
3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில் நுட்படத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசரை பார்த்த ரசிகர்கள் பொம்மை படம் போல் இருப்பதாக கலாய்த்து தள்ளினர்.
இந்நிலையில் வருகிற ஜுன் 16 ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழுவினர் புரமோஷனில் படு ஜோராக இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் 'ஆதிபுருஷ்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்றைய தினம் திருப்பத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை படத்தின் இயக்குனர் ஓம் ராவத், கீர்த்தி சனோன் இருவரும் ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசம் மேற்கொண்டனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்ததும் இருவரும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதன்பின்னர் கீர்த்தி சனோன் காரில் ஏறி கிளம்புவதற்கு முன்பாக அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் செல்லமாக முத்தம் கொடுத்துள்ளார் ஓம் ராவத். இதனையடுத்து கீர்த்தி சனோன் சுற்றிருந்த பெண்கள் சிலரை கட்டிப்பிடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் சாமி கும்பிட வந்த இடத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா என இயக்குனர் ஓம் ராவத்தை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..