04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் சென்றடைந்த அவர் தொழில்அதிபர்கள், நோபல் பரிசு வென்றவர்கள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள், முன்னணி நிறுவன சிஇஓ-க்கள் போன்றோரை சந்தித்தார். 


அமெரிக்க நேரடிப்படி இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் யோகா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்தியாவில் யோக தினத்தையொட்டி தலைவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 


அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி, உலக யோகா தினம் குறித்து கூறியிருப்பதாவது:- ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பேன். இந்தியாவின் அழைப்பின் பேரில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது. 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினத்திற்கான முன்மொழிவு வந்தபோது, அதற்கு ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

 

யோகா உணர்வுகளை வலுப்படுத்துகிறது, உள் பார்வையை விரிவுபடுத்துகிறது, நம்மை இணைக்கிறது, உயிரினத்தின் ஒற்றுமையை உணர வைக்கிறது. நாம் யோகா மூலம் முரண்பாடுகள், தடைகள் மற்றும் எதிர்ப்பை நீக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 





அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு