04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியிடு

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக், நள்ளிரவு வெளியானது, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக, ‘நா ரெடி’ பாடலும் இன்று வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.

 

த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிஷ்கின், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.


லோகேஷின் வழக்கமான அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது. இன்று(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே நா ரெடி என்ற பாடல் வெளியாவதாக அறிவித்துள்ளனர். இதன் முன்னோட்டமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.





நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியிடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு