22,Dec 2024 (Sun)
  
CH
சினிமா

கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவை என்பதால் நடித்தேன்-தமன்னா

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் தமன்னா கவர்ச்சியாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.


தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜி கர்தா’ வெப் தொடரிலும் தமன்னா அளவிற்கு மிஞ்சிய ஆபாச காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.


இந்த காட்சிகள் குறித்து பலர் ட்ரோல் செய்து வந்த நிலையில், இது குறித்து தமன்னா விளக்கமளித்துள்ளார். அதில், “கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன். ஜி கர்தா வெப் தொடர் பள்ளி பருவத்து காதல் கதை. எனவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவை என்பதால் நடித்தேன்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.





கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவை என்பதால் நடித்தேன்-தமன்னா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு