22,Dec 2024 (Sun)
  
CH
சினிமா

எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் திகதியை வெளியிட்ட கங்கனா ரணாவத்

இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நொவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.






எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் திகதியை வெளியிட்ட கங்கனா ரணாவத்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு