27,Apr 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

வன்முறை முன்னெச்சரிக்கை காரணமாக இணையத்தள சேவை முடக்கம்-மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக விதிக்கப்பட்ட இணையதள சேவைக்கான தடை ஜூலை 05ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 


கடந்த மே மாதம் 3ம் தேதி ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி, பின்னர் கலவரமாக வெடித்தது. பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இன்னும் 50 ஆயிரம் பேர் வரை அங்குள்ள் முகாம்களில் பாதிகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். 


அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 4 நாட்களில் மணிப்பூரில் தங்கி சமதானம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தவியில் இருந்து விலக போவது இல்லை என்று பிரேன் சிங் தெரிவித்துள்ளார். 


மணிப்பூரில் சுமர் இரண்டு மாதங்களக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக விதிக்கப்பட்ட இணையதள சேவைக்கான தடை ஜூலை 05ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


மணிப்பூரில் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில், இணையதள சேவைகான தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறை தொடர்பான வதந்திகள் பகிரப்பட்டு வந்ததால், அதனால் வன்முறை தீவிரமானது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.





வன்முறை முன்னெச்சரிக்கை காரணமாக இணையத்தள சேவை முடக்கம்-மணிப்பூர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு