27,Apr 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

கடந்த 9 ஆண்டுகளில் அதிகம் கொள்ளையடித்த மோடி அரசு- அரவிந்த் கெஜ்ரிவால்

சத்தீஸ்கர் சட்டசபைக்கு வரும் நொவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:


காய்கறிகள், பால், தானியங்களின் என அனைத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏன் உயருகிறது என்று எப்போதாவது நினைத்திரீகளா? இந்த பொருட்கள் மீது மோடி அதிக அளவில் வரிவிதித்துள்ளார். இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக அளவில் விதிக்கப்பட்ட வரி விதிப்பு. டீ, காபி, எண்ணெய் போன்றவற்றையும் மோடி விட்டுவைக்கவில்லை.



அதற்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் 250 ஆண்டுகள் கொள்ளையடித்ததை விட கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு அதிகம் கொள்ளையடித்துவிட்டது. கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட இந்த அளவிற்கு கொள்ளையடிக்கவில்லை. முதல் மந்திரி பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கி வருகிறார். ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் பள்ளி, சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை சிறப்பாக உள்ளன. டெல்லியில் அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேர்மையான முறையில் அரசியல் செய்யும் கட்சி ஆம் ஆத்மி மட்டும் தான் என தெரிவித்தார்.





கடந்த 9 ஆண்டுகளில் அதிகம் கொள்ளையடித்த மோடி அரசு- அரவிந்த் கெஜ்ரிவால்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு