2014-ல் திருமணமான ஜோடி ஒன்றின் விவாகரத்து வழக்கில் டெல்லி நீதிமன்றம் இவ்வாறு கருத்து பதிவு செய்துள்ளது. வழக்கை விசாரித்த டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி விபின் குமார் ராய் ”பாலுறவு என்பது இல்லற வாழ்க்கையின் அடித்தளங்களில் ஒன்று. கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு அதனை மறுப்பது மனரீதியிலான கொடுமை செய்வதற்கு இணையானது. மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
திருமணமானது முதலே பாலுறவை மனைவி தவிர்த்து வந்ததை காரணமாக்கி, கணவர் தரப்பில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக வாதாடிய மனைவியின் தரப்பில், ’பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா மனைவிக்கு இருப்பதாக’ தெரிவிக்கப்பட்டது. ஆனபோதும் அவற்றை நிராகரித்த நீதிபதி, ”சுயமாக தனது கணவனை முடிவெடுத்த பெண், திருமணத்துக்கு முன்பாக 11 மாதங்கள் பழகி தெளிந்த பின்னரும், திருமணமான பிறகு வேண்டுமென்றே பாலுறவை தவிர்த்திருக்கிறார். இளம் தம்பதியர் மத்தியில் குடும்ப வாழ்க்கையில் பாலுறவு தவிர்க்க முடியாதது” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களின் முடிவில், கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
0 Comments
No Comments Here ..