வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அறிமுக டெஸ்டில் ஜெய்ஷ்வால் 171 ரன் குவித்தார். இதன் மூலம் தொடக்க வீரரான அவர் புதிய சாதனை படைத்தார். அறிமுக டெஸ்டில் வெளிநாட்டில் 150 ரன்னை தொட்ட முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
ஒட்டு மொத்த அறிமுக டெஸ்டில் 150 ரன்னை எடுத்த 3-வது இந்தியர் ஜெய்ஷ்வால் ஆவார். ஷிகர் தவான் 187 ரன்னும், ரோகித் சர்மா 177 ரன்னும் தங்களது முதல் டெஸ்டில் எடுத்தனர். இருவருமே இந்திய மண்ணில்தான் இதை சாதித்தனர். 171 ரன் குவித்த ஜெய்ஷ்வால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
அறிமுக டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற 8-வது இந்தியர் ஜெய்ஷ்வால் ஆவார். பிரவீன் அம்ரே, ஆர்.பி.சிங், அஸ்வின், தவான், ரோகித் சர்மா, பிரித்விஷா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அறிமுக டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்று இருந்தனர். பிரவீன் அம்ரேயும் (டர்பன்), ஆர்.பி.சிங்கும் (பைசலாபாத்)
0 Comments
No Comments Here ..