04,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. குரூப் 'ஏ' சுற்றில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து- நார்வே அணிகள் முதல் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1-0 என நார்வே அணியை வீழ்த்தியது.


ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனை ஹன்னா விகின்சன் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.


இதை பயன்படுத்தி ஸ்டெபானி காட்லே கோல் அடித்தார். இன்று மூன்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நைஜீரியா- கனடா அணிகள், 2-வது போட்டியில் பிலிப்பைன்ஸ்- சுவிட்சர்லாந்து அணிகள், 3-வது போட்டியில் ஸ்பெயின்- கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன. 32 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அடுத்த மாதம் 20-ந்தேதிவரை நடைபெறுகிறது. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகள் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் இருந்தும் முதல் இரண்டு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்




பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு