29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

நாடு முழுவதும் ரோஜ்கார் திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திரமோடியால் வழங்கப்படும் பணிநியமனங்கள்

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொளி வாயிலாக பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். 


இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக இன்று 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிதி, தபால் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை , மற்றும் பல்வேறுபட்ட துறைகளில் உள்ள வெற்றுப் பணியிடங்களை நிரப்ப, இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அரசு ஊழியர்களாக இதன் மூலம் பொறுப்பு ஏற்று வருகின்றனர்


பணி வாய்ப்புக்கான தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தொழில் நுட்பம் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.




நாடு முழுவதும் ரோஜ்கார் திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திரமோடியால் வழங்கப்படும் பணிநியமனங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு