28,Apr 2024 (Sun)
  
CH
சினிமா

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ரசிகர்களின் கனவுக்கன்னி

90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை நமீதா. நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தனது முதல் பாடதிலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.


இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களான அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்து ஜோதிகா, சிம்ரன், ஷரியா ஆகியோருடன் போட்டிபோட்டவர் நடிகை நமீதா.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதற்கு முக்கிய கரணம் நமீதாவின் கவர்ச்சி தான். இவரின் அழகை ரசிப்பதற்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே தியேட்டர்களை நோக்கி படையெடுக்கும். அதேபோல் நம்பி வந்தவரை நமீதா ஏமாற்றமாட்டார்.


நமீதா தமிழில் மட்டும் பிரபலம் இல்லை தென்னிந்திய சினிமா முழுவதும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குஸ்புவிக்கு கோவில் கட்டியது போல் ரசிகர்கள் பலர் தங்களின் மனதில் நமீதாவுக்கென ஒரு பெரிய பங்களவையே கட்டியுள்ளனர். அதேபோல் ரசிகர்களை "மச்சான்" என்று தான் நமீதா அழைப்பாராம். அதுவே நமீதாவின் அடையாளமாக மாறிவிட்டது. ரசிகர்களும் மச்சான் என்ற வார்த்தையை மிகவும் விரும்பினார். மேலும் ரசிகர்கள் பலர் மச்சான் என்ற சொல்லுக்கு அடிமை என்றே சொல்லலாம்.

கவர்ச்சியில் கலக்கி வந்த நமீதா திடீரென 2017 ஆம் ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நமீதாவின் அழகில் மயங்கிக்கிடந்த ரசிகர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.


திருமணத்திற்கு பின் சினிமாவில் தலையைக்காட்டாத நமீதா டிவி நிகழ்ச்சிகளில் வலம் வந்தார். மேலும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் போட்டியின் இறுதி வரை செல்லவில்லை என்றாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த நமீதா தற்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நமீதா தற்போது போட்டோஷூட் மூலம் தனது என்ட்ரியை உறுதிப்படுத்தியுள்ளது




சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ரசிகர்களின் கனவுக்கன்னி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு