28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்துத் துறை அமைச்சர்

வார இறுதிநாட்கள் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

இந்த மாதத்தில் 12, 13ஆம் தேதி சனி, ஞாயிறு மற்றும் 15ஆம் தேதி சுதந்திர தினம் என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மட்டும் 18,000 மேற்பட்டோர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.



இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 500 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இதே போன்று, சனிக்கிழமையன்று 200 பேருந்துகள், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோன்று, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக செவ்வாய்க்கிழமை அன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.





சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்துத் துறை அமைச்சர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு