உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் Blued என்ற தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப்-ல் போலி ஐடி உருவாக்கி, நட்பு அடிப்படையில சாட் செய்வார்கள். பின்னர், தன்பாலின உடலுறவில் விருப்பம் உள்ளதா? எனக்கேட்பார்கள். அப்படி விருப்பம் இருக்கிறது என சாட் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்வார்கள்.
அப்படி வரும்போது, அவர்ளுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். அதை மற்றொருவர் மூலம் வீடியோ எடுத்துக் கொள்வார்கள். உடலுறவு முடிந்ததும், அந்த நபரிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துவிடுவார்கள். மேலும், உடலுறவில் ஈடுபட்டதை வீடியோவாக படம் எடுத்து வைத்துள்ளோம்.
அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டல் விடுத்து பணம் பறித்துக்கொள்வார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீசார் புகார் அளிக்க, அதன்அடிப்படையில் போலீசார் இந்த மோசடி கும்பலை பிடித்துள்ளது.
போலீசார் விசாரணையில் மேற்கொண்ட விசயங்கள் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து போலீசார் ஐநது செல்போன்கள், லேப்டாப், 9 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..