04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளின் பெரும்பாலான நேர அலுவல் பணி முடங்கியது. இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் அமளியை மீறி மத்திய அரசு பல மசோதாக்களை அறிமுகம் செய்தது.

அதில் ஒரு மசோதா டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மசோதா. இந்த மசோதா மக்களவையில் கடந்த 7-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.


அதனைத்தொடர்ந்து 9-ந்தேதி மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.




டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு