04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

பொய் வாக்குறுதிகள் சொல்லி திருமணம் செய்பவர்கள் அல்லது பாலியல் ரீதியாக உறவு கொள்பவர்களுக்கு தண்டனை

இந்தியாவில் சமீப காலமாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் மற்றும் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமின்றி பெண்களை பொய் வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி பாலியல் ரீதியாக சுரண்டும் வழக்குகளும் அதிகரித்துள்ளன

ஏமாற்றும் ஆண்களுக்கு எச்சரிக்கை


ஆனால், திருமணம் செய்து கொள்கிறேன், பணிஉயர்வு தருகிறேன் உள்ளிட்ட பல்வேறு பொய் வாக்குறுதிகளின் பேரில் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக சுரண்டும் ஆண்களை தண்டிக்க சரியான சட்டங்கள் இதுவரை இந்தியாவில் இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் திருத்தப்பட்டுள்ள மசோதா மூலம் இனி பொய் வாக்குறுதிகள் சொல்லி திருமணம் செய்பவர்கள் அல்லது பாலியல் ரீதியாக உறவு கொள்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு குற்றத்தின் தன்மைக்கேற்ப 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரை கிடைக்கலாம்.

புதிய மசோதா

தற்போது இந்த மசோதா பாராளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் குறித்து பலரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இது தவறாக பயன்படுத்தபட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறி வருகின்றனர். மேலும், திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னால் திருமணம் செய்யாமல் போவதும், பணிஉயர்வு போன்ற இதர காரணங்களை சொல்லி பாலியல் உறவில் ஈடுபட்டு விட்டு பின்னால் ஏமாற்றுவதையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது என்று பலரும் இந்த சட்டம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.


பிரிட்டிஷ் கால ஐபிசி

Bharatiya Nyaya Sanhita என்ற மசோதாவை தாக்கல் செய்ததன் மூலம் பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட IPC சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறது மத்திய அரசு. அந்த அடிப்படையில் ஐபிசி சட்டத்தில் மேற்கண்ட மாற்றத்தையும் முன்மொழிந்துள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் பொய் வாக்குறுதிகளை கொடுத்து பெண்களுடன் பாலியல்ரீதியாக உறவு கொள்பவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம்.

மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மைனர் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையிலும் சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன




பொய் வாக்குறுதிகள் சொல்லி திருமணம் செய்பவர்கள் அல்லது பாலியல் ரீதியாக உறவு கொள்பவர்களுக்கு தண்டனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு