04,Dec 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

மருமகளை ஆபாச படத்தில் நடிக்குமாறு துன்புறுத்திய கணவன் மற்றும் மாமனார் குடும்பத்தினர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் நபர், தனது 21 வயது மருமகளை ஆபாச படங்களில் நடிக்க வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவரது மனைவியும் மகனும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆபாச படங்களில் நடித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூறிய அவர்கள் அந்த படங்களில் நடிக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மகனின் படுக்கையறையில் அந்த நபர் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளார். தனது மகனும் மருமகளும் நெருக்கமாக இருப்பதை தன்னுடைய அறையில் உள்ள ஸ்க்ரீனில் பார்த்து ரசித்து வந்துள்ளார். இது அவரது மகனுக்கு தெரிந்தே நடந்துள்ளது


இதனிடையே அந்த பெண் கர்ப்பமானதை தொடர்ந்து அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்க்க வேண்டும் என கூறிய அவருடைய மாமனார், அவரது மகனிடம் கூறி அவரை நிர்வாணமாக வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார். தனது அப்பா சொன்னப்படியே தனது மனைவியை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்துள்ளார் அவரது மகன்


அந்த வீடியோவை மொத்த குடும்பமும் சேர்ந்து வாட்ஸ்அப் குரூப்புகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அறிந்த அந்த பெண் குடும்பத்தினரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது தங்கள் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என அந்த பெண்ணை, அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மிரட்டியுள்ளனர்.

வலுக்கட்டாயமாக ஆபாச காட்சிகளில் அந்த பெண் நடிக்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக மாமனார் மற்றும் அவரது குடும்பத்தினரால் இந்த சித்திரவதையை அனுபவித்து வந்துள்ளார் அந்த பெண். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கொடுமையை அனுபவிக்க முடியால் தனது பெற்றோரிடம் கூறி கதறிய அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரது மாமனார், மாமியார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்காக சொந்த மருமகளை மாமனாரே ஆபாச படங்களில் நடிக்க வைக்க முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




மருமகளை ஆபாச படத்தில் நடிக்குமாறு துன்புறுத்திய கணவன் மற்றும் மாமனார் குடும்பத்தினர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு