மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பத் தொடங்கியது.
இந்த நிலையில் 2 வாரத்திற்கு பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. நேற்று உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
காங்போக்பி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்திவருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மலை மாவட்டங்களில் பாதுகாப்பிற்காக அசாம் ரைபிள் படை வீரர்களை நிறுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்
0 Comments
No Comments Here ..