அண்மையில், இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படவுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டம் , கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
24ம் திகதி அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் தொடர்பாகவும், ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..