07,May 2024 (Tue)
  
CH
இந்திய செய்தி

384-வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வரும் சென்னை

இந்தியாவின் முதல் மாநகராட்சி என்கிற கெளரவத்தோடு பிற மாநில மக்களால் அறியப்படும் நாட்டின் 5ஆவது பெரு நகரம் சென்னை.சுமார் ஒரு கோடிக்கும் மேலானோர் வசிக்கும் சென்னையில், ஒரு பக்கம் உழைக்கும் மக்கள். மற்றொரு பக்கம் உயர்குடிகள் என, அனைவரும் ஒருசேர உள்ளனர். பிழைப்புத் தேடி வருவோரை, மொழி, மதம் என எந்த வேறுபாடுமின்றி அரவணைக்கிறது சென்னை


இன்றைய நவீன சென்னை, 384 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டணம் என்பதில் இருந்து தொடங்கியது. மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர், தங்களுக்காக கோட்டை, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புக்காக வாங்கிய மணல் திட்டுதான், 1639ஆம் ஆண்டு இதே நாளில் செனை பட்டணம் என்ற பெயரில் கையெழுத்தானது.அன்றுதான் சென்னை பிறந்தது.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, தமிழ்நாட்டுக்கே தலைமை இடமாக தற்போதும் விளங்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இங்கு கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டடத்திலும், சென்னையின் பூர்வக்குடி மக்களின் உழைப்பும் கலந்திருக்கிறது


சென்னை உயர்நீதிமன்றம், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம், 1664ல் தொடங்கப்பட்ட ராஜீவ்காந்தி மருத்துவமனை, விக்டோரியா மஹால், துறைமுகம், ராஜாஜி அரங்கம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவை இன்றளவும் சென்னையின் பெருமையை தாங்கி நிற்கின்றன. இந்திய காவல் துறையே மதராஸ் மாகாண காவல் சட்டம் 1859-ன் அடிப்படையில் 1860-ல் உருவாக்கப்பட்டது.

நாட்டின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரை, டைடல் தொழில் நுட்ப பூங்கா, நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்து முனையமான கோயம்பேடு போக்குவரத்து முனையம், பொழுதுபோக்கு அரங்கங்கள், வழிபாட்டு தலங்கள், கன்னிமாரா, அண்ணா பொது நூலகங்கள், கலங்கரை விளக்கம் என சென்னை எப்போதும் வந்தாரை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. 


இப்படிப்பட்ட சென்னை சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் தாக்கிய போதும், எழுந்து நின்று நம் பழமையையும் பெருமைகளையும் இன்றளவும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல





384-வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வரும் சென்னை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு