04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

இயக்குனர்கள் தான் எங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க- சீரியல் நடிகை ப்ரீத்தா ரெட்டி.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலான இனியாவில் நடித்துள்ளார் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனது சினிமா அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.


அதில் அவர், "சீரியலில் வர வேண்டும் என்பது என்னுடைய சிறு வயதி ஆசை. என் உறவினர்கள் விளம்பரங்கள் ஷூட் பண்ணுவாங்க. அவர்களை ஊரில் வியப்போடு பார்ப்பாங்க. அப்போதே எனக்கு ஆசை வந்துவிட்டது. ஆனாலும் தொடங்கியது மாடலிங் தான். கல்லூரி படிக்கும் போது ஆடிஷன்ஸ் பங்கேற்று, சீரியலுக்குள் வந்தேன்" என்று கூறியுள்ளார்.

இதன

ை தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், "சினிமா வாய்ப்பு கேட்டு போகும் போது, கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் இயக்குனர்கள் தான் எங்களிடம் அப்ரோச் பண்ணுவாங்க. அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க. எல்லாருக்குமே இது நடந்திருக்கும். சொல்லாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம். ஃபீல்டு தெரியாமல் போனால், கண்டிப்பாக நம்மை அதற்காக அணுகுவார்கள். ஒரு தயாரிப்பாளரிடம் பேசும் போது, ‘இதுக்கெல்லாம் ரெடி இல்லை என்றால், எதுக்கு இந்த ஃபீல்டுக்கு வர்றீங்க?’ என்று கேட்டார்.

இதை த

ான் செய்ய வேண்டும் என்றால், எதற்கு சினிமாவுக்கு வர வேண்டும்? அதற்கு அதையே தொழிலா செய்துவிட்டு போகலாமே? நாம தான் தவறாக தொழிலை தேர்வு செய்துவிட்டோம் என்று சினிமா வாய்ப்பை தவிர்த்துவிட்டேன். சீரியலில் அந்த தொல்லை இல்லை என்று கூறமாட்டேன்.

இருக்கலாம். ஆனால் நான் இதுவரை சீரியலில் அந்த பிரச்னையை நான் இதுவரை சந்தித்தது இல்லை. சினிமாவில் தேர்வான பிறகு தான், இந்த விசயத்தை எல்லாம் கேட்பார்கள். அதனால் தான் சினிமாவில் முயற்சிக்கவே இல்லை" என்று கூறியுள்ளார்.




இயக்குனர்கள் தான் எங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க- சீரியல் நடிகை ப்ரீத்தா ரெட்டி.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு