குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் நடிகை நித்யா மேனன். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்திருந்த உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது.
விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு பிரபலம் அடைந்தவர் நித்யா மேனன். இதைத் தொடர்ந்து தனுஷுடன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
இறுதியாக நித்யா மேனன் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் நித்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அவரின் கண்கள் கூட நடிப்பதாக இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்த்தியிருந்தார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் நித்யா மேனன் போல தங்களுக்கு ஒரு தோழி இல்லையே என ஏங்கினர். அந்தளவுக்கு ஷோபனாவின் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்நிலையில் நித்யா மேனன் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து நடிகை நித்யா மேனனோ அவரது தரப்பினரோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது
0 Comments
No Comments Here ..