ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்காக அமைக்கப்பட உள்ள புதிய கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும், அவரையே பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், செயற்குழுவின் 16 உறுப்பினர்கள் முன் அறிவிப்பின்றி குறித்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..