17,Sep 2024 (Tue)
  
CH
சினிமா

நயந்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள்

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி திட்டு வாங்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனாகத் தான் இருக்கும். அதற்கு காரணம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. முன்னதாக நயன்தாராவை காதலித்த காலத்தில் அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.

திருமணமான பிறகு உயிர், உலகிற்கு தந்தையானார் விக்னேஷ் சிவன். இரட்டை மகன்களின் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதற்காகவும் அவரை திட்டினார்கள். மகன்களின் முகம் தெரியாமல் முதுகு தெரியும்படி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தார் விக்னேஷ் சிவன்.

பையன்களின் முகத்தை காட்டினால் தான் என்ன?. புகைப்படம் வெளியிட்டால் முகம் தெரியும்படி வெளியிடுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள் என ரசிகர்கள் திட்டினார்கள். இந்நிலையில் தான் தன் செல்ல மகன்களின் முதலாவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து போட்ட போஸ்ட்டில் அவர்களின் முகங்கள் தெரியும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இரண்டு செல்லங்களின் முகமும் தெளிவாகத் தெரியும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ விக்னேஷ் சிவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

உயிர், உலகின் முகத்தை முதல் முறையாக தெளிவாக பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

மகன்களின் பிறந்தநாள் அன்று தான் அவர்களின் முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என்று தான் இத்தனை மாதங்களாக அவர்களின் முதுகு புகைப்படங்களை வெளியிட்டீர்களா அன்பான இயக்குநரே. இது தெரியாமல் அவசரப்பட்டு உங்களை திட்டிவிட்டோம்.

மகன்கள் ரொம்ப க்யூட்டாக இருக்கிறார்கள். ஒரு பிள்ளை உங்களை போன்றும், இன்னொரு பிள்ளை அம்மா நயன்தாரா போன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுத்திப் போடுங்க விக்கி. ஊர் கண்ணெல்லாம் உங்கள் உலக், உயிர் மீது தான் என தெரிவித்துள்ளனர்.

நானும், நயன்தாராவும் இரட்டை பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் நேற்று தான் அறிவிப்பு வெளியிட்டது போன்று இருக்கிறது. ஆனால் அதற்குள் அவர்களுக்கு ஒரு வயதாகிவிட்டது.

கெரியரை பொறுத்தவரை பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கப் போகிறார் விக்னேஷ் சிவன். அவருக்கு பிரதீப் டேட்ஸ் கொடுத்ததை வித்தியாசமான வீடியோவாக வெளியிட்டார்கள். அஜித் குமாரின் ஏ.கே. 62 படம் கைவிட்டுப் போன பிறகு இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

நயன்தாராவோ தான் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்த இறைவன் பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அகமது இயக்கியிருக்கும் இறைவன் படம் நாளை அதாவது செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகிறது.

முன்னதாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் பாலிவுட் படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.




நயந்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு