15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!

தமிழக மாவட்டம் திருவாரூரில் பாடசாலை மாணவி ஒருவர் அமிலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


திருவாரூர் மாவட்டம் வடபாதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிரியதர்ஷினி (16). 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் செல்போனில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது. பொதுத் தேர்வுக்கு படிக்காமல் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை அவரது தந்தை மணிமாறன் கண்டித்துள்ளார்.


இதனால் பிரியதர்ஷினி சோகமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அமிலத்தை குடித்துள்ளார். அச்சமயம் பிரியதர்ஷினியின் பெற்றோர் வெளியூருக்கு சென்றிருக்கின்றனர். அதனால் உறவினர்கள் பிரியதர்ஷினியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இதுதொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு