15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்!

திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக் குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று தனது 71 ஆவது வயதில் காலமானார்.


’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்' போன்ற பல ஹிட் பாடல்களை எண்பதுகளில் இசையமைத்துள்ளார். விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.

அவர் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினரும். ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்து வருகின்றனர்.




பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு