06,Apr 2025 (Sun)
  
CH
இந்திய செய்தி

பாட்டியை வன்கொடுமை செய்த பேரன்!!

உத்தர பிரதேசத்தில் 80 வயது தனது சொந்த பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ள பிஹவுர் கிராமத்தை சேர்ந்தவர் அமித் கௌதம். 22 வயது இளைஞரான இவர், அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். குடி போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு சாலையில் சண்டை போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமை இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

முழு போதையில் தனது வீட்டுக்கு செல்லாமல், அதே பகுதியில் இருக்கும் இளைஞரின் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே அந்த மூதாட்டியிடம் வம்பிழுத்துள்ளார். மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதனை அந்த மூதாட்டி தடுக்க முயலவே, இளைஞர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து மூதாட்டியை வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து மூதாட்டி தனது வீட்டிலிருந்து ஒலி எழுப்பவே, இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயத்துடன் கிடந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் மூதாட்டிக்கு ஒரு பல் போய்விட்டது.


இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியான 22 வயது இளைஞர் அமித்தை கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் 80 வயது தனது சொந்த பாட்டியை பேரனே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





பாட்டியை வன்கொடுமை செய்த பேரன்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு