2024 நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒடிசாவில் 147 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 292 இடங்களில் மக்களவைத் தொகுதிகளாக கைப்பற்றியது. எனினும், பாஜகவால் 272 என்ற தனி பெரும்பான்மை எண்ணிக்கை பெற முடியவில்லை. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டும் 240 தொகுதிகளை கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகார பெற எட்டு சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், 8 புள்ளி 19 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58 சதவீத வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், இந்த முறை 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, 12 வது மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..