அண்மையில் வெளியான சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்கள் அவருக்கு எதிர் பார்த்த அளவுக்கு வெற்றியை அளிக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 44ஆவது திரைப்படமான ரெட்ரோ மே 1ம் திகதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது .
கார்த்திக் சுப்பராஜ் இயக்கித்தில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் முன்னை நடிகர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு இந்த திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு come back படமாக அமைந்திருப்பதாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கின்றார்'
ரெட்ரோ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் முதல் நாள் வசூல் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது X பக்கத்தில் நன்றிதெரிவிக்கும் வகையில் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் " ரெட்ரோ படக்குழு சார்பாக அனைத்து ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு, திரையரங்கிள் ஆரவாரம் செய்து உங்கள் அன்பை பொழிந்ததற்காக மிக்க நன்றி. இது நல்ல நேர தொடக்கத்தின் ஒரு ஆரம்ப புள்ளியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், சதோஷத்தையும் தருகிறது." என கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..