மத்தியபிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டத்தில் உள்ள பொலியா கிராமத்தை சேர்ந்த பிரியான்ஷ் மால்வியா என்ற 12 வயது சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான்.
பிரியான்ஷ் சம்பவத்தன்று தனது தந்தையின் தோட்டத்தில் உள்ள குடிசையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை சிறுவன் படித்த பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. இதையொட்டி நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பற்றி நாடகம் நடந்துள்ளது.
இந்த நாடகத்தில் பிரியான்ஷ் பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்திருந்தார். மறுநாள் தான் நடித்த நாடகத்தின் வீடியோ காட்சிகளை ஸ்மார்ட்போனில் பார்த்துள்ளார். அப்போது பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சியை பார்த்த பிரியான்ஷ் தானும் தூக்குப்போட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரியான்ஷின் தந்தை வினோத் மால்வியா அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். மாணவன் தற்கொலை குறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், “அவனது விருப்பத்தின் பேரில் தான் பிரியான்ஷ் நாடகத்தில் நடிக்க வைத்தோம். அந்த நாடகமே அவரது சாவுக்கு காரணமாக அமைய செல்போனே காரணம். எனவே சிறிய குழந்தைகளுக்கு பெற்றோர் தயவு செய்து ஸ்மார்ட்போன்களை கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
0 Comments
No Comments Here ..