பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ஏர் இந்தியாவுக்கு வரவேண்டிய பாக்கித்தொகை குறித்து ஓய்வுபெற்ற அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனு அளித்திருந்தார். அதற்கு ஏர் இந்தியா பதில் அளித்துள்ளது.
அதில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்கு தனி விமானங்கள் அனுப்பியதற்காக, மத்திய அரசிடம் இருந்து ரூ.822 கோடி வர வேண்டி இருப்பதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.
மேலும், அரசு அதிகாரிகள் கடனுக்கு டிக்கெட் பெற்றவகையில் ரூ.526 கோடியும், மீட்புப்பணிக்கு ரூ.9 கோடியே 67 லட்சமும், வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வந்ததற்காக ரூ.12 கோடியே 65 லட்சமும் வர வேண்டி இருப்பதாக கூறியுள்ளது.
0 Comments
No Comments Here ..