17,Mar 2026 (Tue)
  
CH
சினிமா

நடிகர் ஸ்ரீகாந்த் கைது: கழுகு பட நடிகர் தலைமறைவு

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் – மேலும் சில சினிமா பிரபலங்கள் சிக்கும் அபாயம்?


---


போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா உலகில் போதைப்பொருள் புழக்கம் குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


படத்திற்காகச் சம்பளமாக ரூ.10 லட்சம் கேட்டபோது, பிரசாத் என்பவர் தனக்குப் பலமுறை கோகைன் போதைப்பொருளை தந்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 


அண்மையில், பிரசாத்திடமிருந்து 250 கிராம் கோகைன் வாங்கி தனது வீட்டில் களியாட்ட நிகழ்வு நடத்தியதாகவும் ஸ்ரீகாந்த் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தத் தகவல்கள், தமிழ் சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன.


இந்த சூழலில் ஸ்ரீகாந்த்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கழுகு, 'யாமிருக்க பயமே' போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த பொலிசார் திட்டமிட்டனர். 


ஆனால், பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின்போது கிருஷ்ணா தற்போது தலைமறைவாகிவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணாவுக்கு அண்மையில்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



---




நடிகர் ஸ்ரீகாந்த் கைது: கழுகு பட நடிகர் தலைமறைவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு