15,Jun 2026 (Mon)
  
CH
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 161 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து. 345 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் Avishka Fernando 127 ஓட்டங்களையும் Kusal Mendis 119 ஓட்டங்களையும் மிக சிறப்பாக பெற்றுக்கொடுத்தனர். 

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Sheldon Cottrell 4 விக்கெட்டுக்களையும், Alzarri Joseph 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், 346 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 39.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Shai Hope 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில், Lakshan Sandakan மற்றும் Wanindu Hasaranga ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகநாக Avishka Fernando தெரிவானார்.

இந்த நிலையில், மூன்று போட்களை கொண்ட ஒருநாள் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு