இலங்கை சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்தின் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளமாட்டார்கள் என கப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
எனினும் வாழ்த்துக்கு பதிலாக, தொடாமல் ஒருவரையொருவர் வாழ்த்துவது பாராட்டுவது என்பன தொடரும் என ஜோ ரூட் கூறியுள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஆடுகிறது . அதற்கான பயணத்துக்கு முன்புதான் ஜோ ரூட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தென்னாபிரிக்கா பயணத்தின் போது இங்கிலாந்து வீரர்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட்டது, அதோடு உணவுக்குழல் பிரச்சினைகளும் ஏற்பட்டது. எனவே இலங்கை தொடரின் போது உடல் ரீதியான தொடர்பு மட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும், தமது மருத்துவக் குழு இந்த அறிவுரையை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து இங்கிலாந்து அணியின் மருத்துவக் குழுவால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன் இங்கிலாந்து வீரர்களிற்கு நோய் எதிர்ப்பு சக்தி பொதிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..