12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

இலங்கை வந்தது இங்கிலாந்து

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணி, நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தது.

ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை முதலாவது பயிற்சிப் போட்டியும், 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இரண்டாவது பயிற்சிப் போட்டியும் இடம்பெற உள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி முதல், 23ஆம் திகதி வரை, காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி, 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை. கொழும்பு, எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெற உள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி, இன்று இரவு, கண்டி, பல்லேகலையில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




இலங்கை வந்தது இங்கிலாந்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு