10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் 30ஆக உயர்வு

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று தெரிவித்திருந்த நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியாவில் 30ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் கொத்துக்கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தங்களது நாட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் உலக நாடுகளே விழி பிதுங்கியுள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக அளவில் மருத்துவ வல்லுனர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதமாக ருத்ரதாண்டவம் ஆடிவந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது தலைத்தூக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று தெரிவித்திருந்தார். அதில், இத்தாலி நாட்டை சேர்ந்த 15 பேரும் அடங்குவர்.

இதையடுத்து, டெல்லியின் புறநகர் பகுதியான குர்கானில் இயங்கிவரும் Paytm நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 29ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.




கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் 30ஆக உயர்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு