06,May 2024 (Mon)
  
CH
சினிமா

7 மாதங்களில் நடந்த ஆர்யாவின் மாற்றம்...

பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ஆர்யா தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியிலும், மற்ற நடிகர்களிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காப்பான், டெடி படத்தை அடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. 1970-காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாராவும், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திரா ராஜு இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன.

இந்தப் படத்துக்காக தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியிருக்கும் ஆர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கான புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார். அதைப்பார்த்த அவரது ரசிகர்களும், திரைத்துறை நண்பர்களும் ஆச்சர்யமடைந்தனர். தனது கணவர் கடினமான உடற்பயிற்சிகள் மேற்கொள்வது தனக்கு வலியை ஏற்படுத்துவதாக உருக்கமாக தெரிவித்திருந்தார் அவரது மனைவி

இந்நிலையில் 7 மாதங்களுக்கு முந்தைய புகைப்படத்தையும், இப்போதைய புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஆர்யா, 7 மாதங்களாக உடற்பயிற்சி மற்றும் பாக்ஸிங் செய்ததன் தாக்கம் இது. எனது பயிற்சியாளர்கள் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இவர்கள் எல்லோரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். பயிற்சியாளர்கள் ஜெய், ஜான்சன், சந்தோஷ், திரு, பிரசாத் ஆகியோருக்கு அன்பு கலந்த நன்றி” என்று கூறியுள்ளார்.




7 மாதங்களில் நடந்த ஆர்யாவின் மாற்றம்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு