10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது

வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த க.அன்பழகன், நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 98. க.அன்பழகனின் மறைவுச்செய்தி அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். பின்னர் அன்பழகனின் உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு, தனி வாகனம் மூலமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாகனத்தில் முன்னால் செல்ல, ஏராளமான திமுக தொண்டர்கள் பின்னால் வர, அன்பழகனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் இல்லத்தில், கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அன்பழகனின் உடல் வைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உள்ளிட்டோர் அன்பழகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் அஞ்சலி செலுத்தினர்.க.அன்பழகன் உடலுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, மாலை 4.30 மணியளவில் கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து பேராசிரியர் அன்பழகனின் உடல் ஊர்வலமாக வேலங்காடு மின்மயானம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.தலைவர்கள் மற்றும் அன்பழகனின் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடல் தகனம் செய்யப்பட்டது.




பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு