கோலிவுட்டில் ஒரு ஹீரோ நிலைத்து நிற்கின்றார் என்றால் அவர்கள் கொடுத்த ஹிட் படங்களை வைத்து தான். அதுவும் மெகா ஹிட் படங்கள் என்ன கொடுத்தார்கள் என்பதை பொறுத்து தான் அவர்களின் சம்பளமும் உயரும்.
அந்த வகையில் சூர்யா, விக்ரம், ஜீவா, ஆர்யா போன்ற நடிகர்கள் ஹிட் என்பதை கொடுத்தே பல வருடம் ஆக, மெகா ஹிட் என்று பார்த்தால் மிகவும் பின்னோக்கி தான் செல்ல வேண்டும்.
தற்போது அப்படி பார்த்தால் சூர்யா கடைசியாக ஒரு மெகா ஹிட் கொடுத்த படம் என்றால் சிங்கம் 2 தான், அதன் பிற்கு இவர் ஹிட்டே கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.
விக்ரம் நீங்கள் நம்பினால் நம்புங்கள், இவரின் கடைசி மெகா ஹிட் படம் தற்போதைக்கு அந்நியன் தான்.
அதேபோல் ஜீவாவிற்கு என்றென்றும் புன்னகை ஹிட் என்றாலும் மெகா ஹிட் கோ தான், ஆர்யாவிற்கு பாஸ் என்கின்ற பாஸ்கரன் தான் மெகா ஹிட்டாக அமைந்த படம்.
இதே வரிசையில் உதயநிதிக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தான் மெகா ஹிட், ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகே எந்திரன் தான் கடைசியாக வந்த மெகா ஹிட் படம் என்றால் நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை.
0 Comments
No Comments Here ..