04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது என்னவோ இரண்டு நிமிடங்கள்தான் என்றாலும், அவர் பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மனிதனை காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். மேலிருந்து ஒன்று வராது. சொந்த உறவுகளையே தொட்டுப் பேச பயப்படும் இந்த சூழ்நிலையிலும் தொட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றி

கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை.

யாராவது சாமி பற்றியோ என்னுடைய மதம் இப்படிச் சொல்கிறது என்று பேசினால் பதிலுக்கு என்னுடைய மதம் இப்படி சொல்கிறது என்று பேசாதீர்கள்.அதற்கு பதில் மனிதத்தையும், மனித நேயத்தையும் கற்றுக்கொடுங்கள். என்னுடைய பிள்ளைகளுக்கு நான் அதைதான் கற்றுக் கொடுக்கிறேன்.

கடவுள் மேல இருக்கான். பூமியில் வாழும் மனிதர்கள் நாம்தான் ஒவ்வொருவருக்கும் பக்கபலம். இது மனிதன் வாழ்வதற்கான இடம். சகோதரத்துவத்தோடு சந்தோஷமாக வாழுங்கள். அன்பை மட்டுமே பகிர்ந்து வாழுங்கள்.

மதத்தைச் சொல்லி கடவுளை பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும் , கடவுளுக்கும் இடையில் மதம் என்பது கிடையாது.




மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு