09,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

கோழிக்கறியில் கோரோனா உள்ளது என்று நிரூபித்தால் 1 கோடி ரூபா

கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக கிளம்பியுள்ள வதந்தியால் கோழிக்கறியின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ள 

கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக நிரூபித்தால் ரூ.1கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். அதுதவிர, கொரோனா பாதிப்புக்கு உள்ளான 13 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36 பேரும், கேரளாவில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

வர்த்தகம் தொடங்கி அனைத்து துறைகளையும் இந்த கொரோனா வைரஸ் தொற்று சிதைத்துவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி என உலக நாடுகள் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகின. ஆனால், இது ஒரு வந்ததியே என்ற போதும் கோழிக்கறியின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மூன்று இலக்கங்களில் இருந்த கோழிக்கறியின் விலை இரண்டு இலக்கங்களில் விற்கப்படுகிறது. இதனால் விற்பனையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கோழிக்கறியின் விலை பெருமளவு சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.150க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறும் ரூ.20க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தங்களுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேசமயம், முட்டை விலையும் 6 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. நாமக்கல்லில் முட்டை ஒன்றின் விலை ரூ.2.65க்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இது முட்டை வியாபாரிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக நிரூபித்தால் ரூ.1கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. முன்னதாக, கறி, முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்று கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




கோழிக்கறியில் கோரோனா உள்ளது என்று நிரூபித்தால் 1 கோடி ரூபா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு