11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

கொரோனாவுக்கான மருந்துகள் முன்னேற்பாடாக வாங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான்- பீலா ராஜேஷ்

தமிழ்நாட்டில் மேலும் 98 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், நாட்டிலேயே இந்த நோயை எதிர்கொள்ள தமிழ்நாடுதான் சிறப்பான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,850. அரசுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 136. 28 நாட்கள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 63,380.

தமிழ்நாட்டில் கொரோனா சோதனையை நடத்துவதற்கு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார சோதனைக்கூடம் என மேலும் இரண்டு சோதனைக் கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே, மாநிலத்தில் இந்நோயை ஆராயக்கூடிய அரசாங்க ஆய்வகங்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, 9 தனியார் ஆய்வகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 12,746 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று புதிதாக 98 பேருக்கு அந்நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுவரை 1,075 பேருக்கு அந்நோய் இருப்பதாக அறியப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11. தற்போது வெளிப்படையாக நோயுடன் இருப்பவர்கள் 7 பேர். இதில் யாருமே வென்டிலேட்டரில் இல்லை. 58 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு வருவதாகச் சொல்லப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் எப்போது வருமென செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இது தொடர்பாக சில விளக்கங்களை அளித்தார் பீலா ராஜேஷ்.

"ஜனவரி மாதத்தில்தான் இந்நோயை ஒரு பெருந்தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்நோய் வூஹானில் மட்டுமே இருந்த அந்த காலகட்டத்திலேயே உடனடியாக நாம் விமான நிலையங்களில் ஆட்களைச் சோதிக்கத் துவங்கிவிட்டோம். அதில் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம். அந்த காலகட்டத்திலேயே 146 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட்டன.

இந்தியாவில் யாருக்கும் தொற்றே ஏற்படாத அந்த காலகட்டத்திலேயே தமிழகத்தில் மூன்றடுக்கு முகமூடி 5 லட்சம் இருந்தது. என் 95 முகமூடி ஐம்பதாயிரம் இருந்தது. பாதுகாப்பு ஆடை 40,000 இருந்தது. வென்டிலேட்டர்கள் அனைத்தும் உடனடியாக சர்வீஸ் செய்யப்பட்டு, 2500 வென்டிலேட்டர்கள் தயார் செய்யப்பட்டன.

இந்நோய் எல்லா நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்ததும் 1.5 கோடி மூன்றடுக்கு முகமூடிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. 40,00,000 என் 95 முகமூடிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. 21,00,000 பாதுகாப்பு ஆடைகளுக்கு ஆர்டர் தரப்பட்டது. 560 வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த நோயை எதிர்கொள்ள மிகச் சிறப்பான நிலையில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.

தற்போது தமிழ்நாட்டில் 65 லட்சம் மூன்றடுக்கு முகமூடி இருக்கிறது. மூன்று லட்சம் என்95 முகமூடி இருக்கிறது. 2 லட்சம் பாதுகாப்பு ஆடைகள் உள்ளன. 3371 வென்டிலேட்டர்கள் உள்ளன.

சோதனை கிட்களைப் பொறுத்தவரை இந்திய அரசிடமிருந்து பத்தாயிரம் வந்தது. மாநில அரசு 14,000 கிட்களை ஆர்டர் செய்தது. இதுபோத 1.3 லட்சம் கிட்களை மேலும் ஆர்டர் செய்திருக்கிறோம்.




கொரோனாவுக்கான மருந்துகள் முன்னேற்பாடாக வாங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான்- பீலா ராஜேஷ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு