கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறபிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டிப்பு செய்தர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், கொரோனா தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், "உங்களுடைய ஒத்துழைப்பு கொரோனைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி இருக்கிறது," என்றார்.
ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு வருகிறீர்கள் ’என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
''நாட்டுக்காக கோவிட்-19 நோய்த்தொற்றுடனான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் இதுவரை இந்தியா சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மற்றும் இன ரீதியிலான தாக்குதல்கள் நடத்தப்படுவது நிச்சயம் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த நரேந்திர மோடி, இவை நிச்சயம் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டியவை என்றும் கூறினார்.
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மீதும் மற்றும் இன ரீதியிலான தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு, நிச்சயம் இது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த நரேந்திர மோதி, இது போன்றவை நிச்சயம் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டியவை என்றும் கூறினார்.
''பொருளாதாரத்தை விட இந்திய மக்களின் உயிர் மிகவும் முக்கியமானது மற்றும் விலைமதிப்பற்றது'' என்றார்.
மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..