22,Aug 2025 (Fri)
  
CH
இந்திய செய்தி

நரேந்திரமோடியின் உரையில் என்ன சொல்லியிருக்கின்றார்

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொடர்பாக இதுவரை நாட்டு மக்களுக்கு மூன்று முறை உரையாற்றியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் உரையாற்றினார்.

பேசியபோது, மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார். தொழிற்சாலைகள் சிலவற்றை மீண்டும் இயக்குவதற்கான் அனுமதி மற்றும் தளர்வுகள் குறித்து அறிவிப்பார் என்றூ எதிர்பார்த்த நிலையில், அவைகுறித்து ஏதும் சொல்லவில்லை.

ஆனால், ஏப்ரல் 20ஆம் தேதிவரை கடுமையான விதிகள் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்த பிரதமர்,

அதனைத் தொடர்ந்து 20ஆம் தேதிக்குப் பிறகு சில நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இத்துடன், நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களிடம் ஒரு 7 கோரிக்கைகளை முன் வைத்தார் பிரதமர் மோடி.

அவை:

1. பெரியவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

2. சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள்.

3. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுங்கள்.

4. ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்துங்கள்.

5. எளியவர்களுக்கும், தேவை இருப்பவர்களுக்கும் உதவுங்கள்

6. உங்கள் பணியாட்களை வேலையை விட்டு நிறுத்தாதீர்கள்.

7. கொரோனா போரில் ஈடுபடுவோரை மதியுங்கள் (சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், இன்னும் பல)

நான்காவது முறையாக பேசிய பிரதமர் மோடியின் உரையில், மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்திகள் இவைதான்.




நரேந்திரமோடியின் உரையில் என்ன சொல்லியிருக்கின்றார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு