30,Apr 2024 (Tue)
  
CH
இந்திய செய்தி

கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா எந்தளவிற்கு பாதித்துள்ளது என்றும், தற்போதைய நிலவரம் பற்றியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 130 மாவட்டங்கள் சிவப்பு, 284 மாவட்டங்கள் ஆரஞ்சு, 319 மாவட்டங்கள் பச்சை நிற மண்டலங்களாக இருக்கின்றன. இவற்றில் தமிழகத்தின் நிலவரத்தை இங்கே அலசலாம். இம்மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக மாறியுள்ளன.



இவற்றில் கடந்த 14 நாட்களாக எந்தவொரு வைரஸ் பாதிப்பும் இல்லை. இதன்மூலம் ஆரஞ்சு நிற மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் 24ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னை தொடர்ந்து சிவப்பு மண்டலமாகவே இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள தகவலின்படி, குறிப்பிட்ட பகுதியில் 21 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையெனில் பச்சை நிற மண்டலம் ஆகும்.

இதற்கு முன்பு இந்த கணக்கீடு 28 நாட்களாக இருந்தது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதனின் அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தின்படி,

நாடே திண்டாடுது; இதுல ரூ.68,600 கோடி கடன் தள்ளுபடியா? - கொந்தளித்த சீமான்!

சிவப்பு மண்டலங்கள்:

1 - சென்னை

2 - மதுரை

3 - நாமக்கல்

4 - தஞ்சாவூர்

5 - செங்கல்பட்டு

6 - திருவள்ளூர்

7 - திருப்பூர்

8 - ராணிப்பேட்டை

9 - விருதுநகர்

10 - திருவாரூர்

11 - வேலூர்

12 - காஞ்சிபுரம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை

ஆரஞ்சு மண்டலங்கள்:

1 - தேனி

2 - தென்காசி

3 - நாகப்பட்டினம்

4 - திண்டுக்கல்

5 - விழுப்புரம்

6 - கோயம்புத்தூர்

7 - கடலூர்

8 - சேலம்

9 - கரூர்

10 - தூத்துக்குடி

11 - திருச்சி

12 - திருப்பத்தூர்

13 - கன்னியாகுமரி

14 - திருவண்ணாமலை

15 - ராமநாதபுரம்

16 - திருநெல்வேலி

17 - நீலகிரி

18 - சிவகங்கை

19 - பெரம்பலூர்

20 - கள்ளக்குறிச்சி

21 - அரியலூர்

22 - ஈரோடு

23 - புதுக்கோட்டை

24 - தருமபுரி

ஒரே மாதத்தில் 4 முறை; அடங்காத சிறுத்தை - அச்சத்தில் அம்பாசமுத்திரம் மக்கள்!

பச்சை மண்டலம்:

1 - கிருஷ்ணகிரி

மேலும் சில மாவட்டங்கள் பச்சை மண்டலத்தில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கணக்கின் படி, கோவைக்கு வரும் 21ஆம் தேதியுடனும், ஈரோட்டிற்கு வரும் 14ஆம் தேதியுடனும் 28 நாட்கள் கணக்கு முடிகிறது. அதற்குள் புதிதாக வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனில் இந்த மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் சேர்க்கப்படும். ஈரோட்டிற்கு அருகே இருக்கும் திருப்பூர் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக நீடிக்கிறது.

கடந்த வியாழன் அன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் மாவட்டத்தின் நிலை மறுஆய்விற்கு உட்படுத்தப்படும். நாடு முழுவதும் ஏற்படும் கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப வாரந்தோறும் மூன்று நிற மண்டலங்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு